செங்கல்பட்டு: மாவட்ட பாமக நகரச் செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து, துப்பாக்கியால் காலில் சுட்டு, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இந்த நிலையில், கொலையாளிகளை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி அவரது உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டில், பாமக நகர செயலாளர் நாகராஜ் மர்மகும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மணிக்கூண்டு அருகே பூ தொழில் வியாபாரம் செய்து வந்த நாகராஜ் நேற்று இரவு 9 மணிக்கு வழக்கம் போல் பூ வியாபாரம் முடித்துவிட்டு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு பதுங்கி இருந்த கும்பல் திடீரென ஓடிவந்து மறைத்து வைத்து இருந்த ஆயுதங்கயால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைதடுமாறி நாகராஜ் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் செங்கல்பட்டு காவல் துறையினர், நாகராஜ் உடலை கைப்பற்றி உடற் உராய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை காவல் துறையினர் அமைக்கப்பட்டு இருந்தது.
தனிப்படை போலீசார், அந்த பகுதிகளில் உள்ள செக்போஸ்டுகளுக்கும், புதுச்சேரி காவல்துறைக்கும் தகவல்கள் அளித்துவிட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத கும்பல், செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்தனர். அப்போது, அந்த கும்பல் காவல்துறையினர்மீது தாக்குதல் நடத்த முயன்றதால், காவலர் ஒருவர், தற்காப்புக்காக கொலை கும்பலைத்ச சேர்ந்த ஒருவரின் காலில் துப்பாக்கியால் சூட்டு பிடித்தார். மற்றவர்கள் தப்பி ஓடினர். காயமடைந்தவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஐந்து பேரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
பாமக நகரச் செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், பாமகவினர் மற்றும், அங்கு வந்த நாகராஜின் குடும்பத்தினர் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது . உடலை வாங்க மறுத்தனர். கொலை கும்பலைப் பிடிக்காமல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனால் செங்கல்பட்டு, திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவரது, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக, அந்த பகுதி மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.