டில்லி
வெள்ளை நிறத்தில் இருந்த வந்தே பாரத் ரயில் திடீரென காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. முழுவதும் ஏசி செய்யப்பட்ட இந்த ரயிலில் கட்டணம் காரணமாகப் பல பயணிகள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை. இதையொட்டி இன்று கட்டணக் குறைவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வந்தே பாரத் ரயில் வெள்ளை நிறத்தில் இருந்தது. தற்போது இந்த ரயில் நிறம் மாற்றப்பட்டுக் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜகவினர் ஏற்கனவே பல அரசு அமைப்புக்களில் காவி நிறத்தைப் புகுத்துவது தெரிந்ததே.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள், ”வந்தே பாரத் ரயில் வெள்ளை நிறத்தில் உள்ளதால் அதிக அழுக்காகிறது. அதைத் தவிர்க்க இவ்வாறு நிறம் மாற்றப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளனர் இன்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த காவி நிற ரயிலை பார்வையிட்டுள்ளார்.