சென்னை
அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
மேலும் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.