இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே வீரக்கலைகள் கற்று தீரத்துடன் வெள்ளையரை எதிர்த்து போராடியவர் சிவகங்கைச் சீமையை ஆண்ட வரலாற்றை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம்.
அவரது இறுதிக்கால சோகம் பற்றி அநேகம் பேருக்குத் தெரியாது. கணவனை இழந்தநிலையில் படைக்கு தலைமை வகித்து வீரத்துடன் போரிட்ட தீரப்பெண்மணி மீது “முறையில்லா” உறவு வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. அவரால் வாரிசாக நியமிக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களே இப்படிச் செய்தார்கள் என்பது இன்னும் சோகம்.
இதனால் மிகுந்த மனச்சோர்வுடன், வேதனையுடன் மரணத்தை எய்தினார் அந்த பெண்மணி.
ஆமாம்… உண்மையில் அவரை வீழ்த்தியது வெள்ளைக்காரர்கள் அல்ல… அந்தப் பெண்மணியை பாலியல் ரீதியாக விமர்சித்த சொந்தங்கள்தான்.
திறமை மிக்க பெண்ணை வீழ்த்தும் பேராயுதமாக இன்றும் பயன்படுத்தப்படுவது இது போன்ற விமர்சனங்களே.
இப்படியான விமர்சனங்களை தவிர்ப்போம் என ஆண்கள் உறுதி எடுப்போம்.