சென்னை :நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த 100 கோடி ரூபாய் நிதி விடுவித்து தமிழக முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின்,. உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
‘நமக்கு நாமே’ திட்டம், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. திமுக ஆட்சி காலத்தில் 2011ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது.
2023-24ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 100 கோடி ரூபாயில், 50 கோடியானது முதற்கட்டமாக இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்தது. மீதமுள்ள 50 கோடியானது பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பட்சத்தில் வெளியிப்பிடப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகங்கள், மிதிவண்டி நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் கட்டுதல், அரசு விடுதிகளுக்கு கட்டடம் கட்டுதல், உள் விளையாட்டரங்கம் அமைத்தல், சமுதாயக் கூடம் கட்டுதல், அரசு பள்ளி கட்டடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.