மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார் அஜித் பவார்.
இவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவந்திர பட்நாவிஸ் ஆகியோர் ராஜ்பவன் விரைந்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கும் அவரது உறவினரான அஜித் பவாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக இணக்கமான சூழ்நிலை இல்லாத நிலையில் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு உள்ளதாக கூறியுள்ள அஜித் பவார் மற்றொரு துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
#WATCH | Visuals from Maharashtra Raj Bhavan where NCP leader Chhagan Bhujbal and other party leaders including Ajit Pawar are present.
CM Eknath Shinde has also reached here. pic.twitter.com/1jPCSBu6ZN
— ANI (@ANI) July 2, 2023
அஜித் பவாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.