விருதுநகர்

ன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது   இந்த கோயிலுக்கு மாதம் தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இன்று 1-ம் தேதி ஆனி மாத சனிபிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதாவது இன்று முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலை ஏறுவதற்குப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது.

முக்கியமாக இரவில் மலைக கோயிலில் தங்க அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

தவிர இந்த அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேறத் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது