சென்னை
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்கள் அறிமுகப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழக அரசு டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது., சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்குக் காரணம் டெட்ரா பாக்கெட்டுகள் எளிதில் உடையாது, செலவு குறைவு மற்றும் கலப்படம் செய்ய முடியாது என்பதாகும். எனவே இவ்வாறு அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்களை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் அவற்றைக் கொண்டு வர அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel