வாஷி|ங்டன்

மெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.  தவிர இந்த சந்திப்பின் போது. பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர்.

”அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும். இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களைத் திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பழங்கால பொருட்களைத் திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு நன்றி”

 எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]