சென்னை

ன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்ஹ்டு நீக்கக் கோரி அதிமுக போராட்டம் நடத்த உள்ளது.

திமுக ஆட்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் அப்போது ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை செந்தில் பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளைப் பதிவு செய்து அனைத்தும் நிலுவையில் உள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

இவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.

இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.  அதன்படி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்  இன்று நடத்தப்பட உள்ளது.

காலை 10 மணியளவில், வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]