வாஷிங்டன்

பிரதமர் மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்திக்க உள்ளார்.

இன்று இந்தியப் பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.  பிரதமர் மோடி அமெரிக்கா சென்று பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.

அப்போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.  பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அமெரிக்கப் பயணத்தின்போது நியூயார்க்கில் பிரதமர் மோடி உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவருமான எலான் மஸ்க்கை சந்திக்க உள்ளார்.

அத்துடன் நோபல் பரிசு பெற்ற பிரபலங்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், மருத்துவத்துறை பிரபலங்கள் என பல்வேறு துறை பிரபலங்களைப் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.