பெங்களூரு
கர்நாடக மாநில காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அதிகாரிகள் தொலைபேசி எண்களைப் பார்வைக்கு வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர். முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த பலவித குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க தற்போதைய அரசு பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
முந்தைய பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலம் முழுவதுமே காவல்துறையினரிடம் புகார் அளிக்கும் போது அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என்னும் குர்றம் சாட்டப்படுகிறது/. தற்போதைய காங்கிரஸ் அரசு இந்த குற்றச்சட்டை களைய விரும்புவதால் காவல்துறைத் தலைவர் இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், அனைத்து காவல்நிலையங்களிலும் தங்களது புகார்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் எனவும் இதழாகத் துணை காவல்துறை ஆணையர், இணை காவல்துறை ஆணையர், சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு ஆகியோரின் எண்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் அனைத்து குறைகளையும் வரும் 20ஆம், தேதிக்குள் முடித்து இது குறித்த தகவல்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.