பாலசோர்

பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நேற்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தையடுத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  அவர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தற்போது சென்றுள்ள பிரதமர்  மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மோடி பாலசோரில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.

அவருடன் மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரதமர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின்னர் கட்டாக் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்க உள்ளார்.

 

[youtube-feed feed=1]