வாஷிங்டன்

மது பாட்டி மற்றும் தந்தை கற்றுக் கொடுத்தபடி தாம் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

10 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டன் டிசியில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

அப்போது அவர்,

‘இந்தியா – சீனா இடையேயான இன்றைய சூழ்நிலை மிகவும் கடினமானதாக உள்ளது. அவர்கள் நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலத்தைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. அதாவது  டில்லிக்கு இணையான நிலத்தைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. இது உண்மை, மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், பிரதமர் மோடி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது, அதிகமான மக்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கான வழிமுறைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவின் அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் ஆளும் பாஜக அரசு கைப்பற்றி உள்ளது.

எனக்கு எதிராக வரும் கொலை மிரட்டல்களைக் கண்டு நான் அச்சப்படவில்லை. எல்லோரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் பின்வாங்கக் கூடாது என்பதை என் பாட்டி       இந்திரா காந்தி, என் அப்பா ராஜிவ் காந்தி ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்’

எனத் தெரிவித்துள்ளார்.