மும்பை

காராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு பாஜக மீது அதிருப்தி என்னும் தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. கடந்த 2014-ல் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியைப் பிடித்த போது, முதல்வருக்கான போட்டியில் இருந்தார்.  ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு. பங்கஜா முண்டே அமைச்சரானார். அதையொட்டி 2 பேருக்கும் பனிப்போர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் நடந்த சட்டசபைத் தேர்தலில் பங்கஜா முண்டே தோல்வியைத் தழுவினார்.  பிறகு பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அவர் தற்போது பா.ஜக வின் தேசிய செயலாளராக உள்ளார்.

டில்லியில் நடந்த அகில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாள் விழாவில் பங்கஜா முண்டே கலந்து கொண்டு பேசுகையில்,

“பாஜக மிகப்பெரிய கட்சி. நான் பா.ஜகவுக்கு சொந்தமானவள். ஆனால் பாஜக எனக்குச் சொந்தமானது அல்ல. எனக்கு எனது தந்தையுடன் பிரச்சினை இருந்தால், சகோதரன் வீட்டுக்குச் செல்வேன். எனக்கு எதுவும் கிடைக்கவில்லை எனில், நான் எனது தோட்டத்துக்குச் சென்று கரும்பு வெட்டவும் ஆர்வமாக உள்ளேன். “

எனத் தெரிவித்துள்ளார்..

ஏற்கனவே கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் பங்கஜா முண்டே இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், “அவர் ஒவ்வொரு முறையும் பேசும் போது, அதற்கு தவறான அர்த்தம் காணப்படுகிறது.  இன்றும் அவர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ” என கூறி உள்ளார்.