லிமா
பெரு நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பசிபிக் பெருங்கடலில் புவி வெப்பமாதல் காரணமாக ஒழுங்கற்ற காலநிலை நிலவி ஏற்படுவது எல்நினோ விளைவு என அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடான பெருவில் எல்நினோ விளைவு காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனைச் சமாளிக்கும் திறன் அரசின் பல துறைகளுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாகாணங்களில் உள்ள 131 மாவட்டங்களில் அடுத்த 60 நாட்களுக்கு அவசர நிலையை அறிவித்துப் பெரு அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.