டில்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்குச் சாதாரண பாஸ்போர்ட் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணை நடைபெற்று இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற ராகுல் எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
எனவே தனது பாஸ்போர்ட்டை(டிப்ளமாட்டிக் பாஸ்போர்ட்) தானாகவே) ஒப்படைத்த ராகுல், சாதாரண பாஸ்போர்ட் கேட்டு, டில்லியில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைபவ் மேத்தா, ராகுலுக்கு 3 ஆண்டுகளுக்குத் தடையில்லா சான்று வழங்க நேற்று அனுமதி அளித்தார்.
Patrikai.com official YouTube Channel