2000 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் அதை வாங்கக்கூடாது என்று நேற்று இரவு செய்தி வெளியானது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதாக வெளியானது உண்மைக்கு மாறான செய்தி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விளக்கமளித்துள்ளார்.
முற்றிலும் தவறான செய்தி..
இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.. https://t.co/g17PdyyWLz
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 20, 2023
2016 ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பணம் அதிகம் புழங்கும் கூட்டுறவு வங்கிகள், போக்குவரத்துத் துறை மற்றும் மதுவிலக்கு துறை ஆகியவற்றில் இருந்து அதிகளவிலான மதிப்பிழந்து நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாக அப்போது செய்தியானது.
தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30 க்குள் வங்கிகளில் செலுத்தி அதற்கு இணையான குறைந்த மதிப்பு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நேற்றிரவு முதல் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.