தராபாத்

நேற்றைய ஐ பி எல் போட்டியில் விராட் கோலி அடித்த சதத்தால் பெங்களூரு எளிதில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் மீண்டும் மோசமான பார்மை தொடர்ந்தனர்.

அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த கிளாசன் பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ஆடினார். அவர் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 104 ரன்களில் அவர் வெளியேறிய பின் கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

மொத்தம் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி – டு பிளசிஸ் கூட்டணி சிறப்பாக விளையாடியது.  ஆரம்பத்தில் இருந்தே அதிரடியை கையாண்ட இருவரையும் பிரிக்க ஹைதராபாத் பவுலர்கள் எடுத்த முயற்சி கைகூடவில்லை. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.  ப்

50 ரன்களுக்கு பின் டு பிளசிஸ் சைலன்ட் ஆக, விராட் கோலி டாப் கியரில் ரன்களை குவிக்க ஆரம்பித்தார். விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார். கோலி சிக்ஸர் அடித்து இந்த தொடரில் முதல் சதம் அடித் அடித்த அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். 18வது ஓவரில் தான் இந்தக் கூட்டணியை பிரிக்க முடித்து.

கோலி அவுட் ஆன சில நிமிடங்களிலேயே 71 ரன்கள் எடுத்திருந்த டு பிளசிஸ்ஸும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடிக்க, 19.2 ஓவரில் 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது பெங்களூரு.

ஹைதராபாத் தரப்பில் நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தற்போதைய ஐ பி எல் தொடரில் பெங்களூரு பெறும் 7வது வெற்றி இது என்பதால் பிளே ஆஃப் ரேஸில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது  இனும் ஒரு போட்டியில் அந்த அணி. குஜராத் அணியுடன் அந்த அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.