சென்னை:
நெல்லை பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
உலகின் தொன்மையான பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்நாட்டு பண்பாடு. அதை சான்றோடு விளக்க, 3200 ஆண்டுகள் முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தை ‘பொருநை அருங்காட்சியகம்’ என்ற பெயரில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை காட்சிப்படுத்த, திருநெல்வேலியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. நெல்லை பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.