சென்னை
தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தின் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் சுமார் 20 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலர் 16 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் அதன் விவரம் வருமாறு :
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரித்துறை (நிர்வாகம்) இணை ஆணையராக இருந்த சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் ராஜ கோபால் சுங்கரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்திக் கழக நிர்வாக இணை இயக்குனர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம்.என்.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனிமேரி ஸ்வர்னா நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா நியமிக்கப்பட்டுள்ளார்.