கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 106, பாஜக 95, மதசார்பற்ற ஜனதா தளம் 21 மற்றும் இதர பிரிவினர் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.
அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதுள்ள நிலவரப்படி எந்தக் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் இழுபறி நிலவி வருகிறது.
இதனை அடுத்து கர்நாடகத்தை ஆளப்போவது யார் என்பதை மதசார்பற்ற ஜனதா தள கட்சி தீர்மானிக்கும் நிலை உருவாகி உள்ளது.