பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாக அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

நாளை கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.   தேர்தலில் காங்கிரஸ், ம ஜ த மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.  கருத்துக் கணிப்புப்படி இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் மத்திய பாஜக அமைச்சர்கள் பெருமளவில் பிரச்சாரம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநில பாஜக அரசைத் தொடர்ந்து 40% கமிஷன் அரசு என விமர்சித்து வருகிறது.  இக்கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் இந்த 40% கமிஷன் குற்றச்சாட்டு முக்கிய இடத்தில் இருந்தது.  இந்நிலையில் கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்குப் பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன. கர்நாடகத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும். கர்நாடகத்தில் பெருகிவிட்ட ஊழல் அனைவரது மனசாட்சியையும் காயப்படுத்தி இருக்கிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெற உள்ள வேலையில் இந்த அறிக்கை வெலியாகி உள்ளது.  ஒப்பந்ததாரர்களின் இந்த 40% கமிஷன் அறிக்கை பாஜகவினரை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.