பெங்களூரூ:
மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி பிஎம்டிசி பேருந்தில் பயணம் செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

கர்நாடக தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு தெருக்களில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
இன்று காலை, கன்னிங்ஹாம் சாலையில் உள்ள கஃபே காபி டே விற்பனை நிலையத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு வாடிக்கையாளர்களிடம் பேசினார்.
பின்னர் ராகுல் காந்தி பிஎம்டிசி பேருந்தில் ஏறி, கன்னிங்ஹாம் சாலையில் இருந்து லிங்கராஜபுரம் நோக்கி பயணம் செய்தார். பேருந்தில் இருந்த சில மாணவர்களிடம் அவர் பேசி வாக்கு சேகரித்தார்.
Patrikai.com official YouTube Channel