பஞ்சாப்
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
தற்போது விறுவிறுப்பாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டி பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்த பஞ்சாப் 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது.
215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பையின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து இஷான் கிஷன், கேமரூன் கிரீன் பாட்னர்ஷிப் அமைத்து கேமரூன் கிரீன் 23 ரன்களில் அவுட் ஆனாலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் இணைந்து பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை விளாசினார்.
மொத்தம் 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்த இவரை, நாதன் எலிஸ் வெளியேற்றினார். அணியில் நிலைத்து ஆடிய இஷான் கிஷனும் 75 ரன்களில் பெவிலியன் திரும்ப 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது மும்பை. அணி
இறுதியில் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் டிம் டேவிட், திலக் வர்மா களத்தில் இருந்தனர். திலக் வர்மா ஃபினிஷிங் ஷாட்டை சிக்சராக அடித்து வெற்றியை பதிவு செய்தார். இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வெற்றிகொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.