வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் சிஎன்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஒப்புதலை நிதி அமைச்சகம் விரைவில் அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் வங்கி ஊழியர்களின் ஐக்கிய மன்றம் (UFBEs) ஆகியவை வாரத்திற்கு 5 நாள் வேலையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதாகவும் தினமும் 40 நிமிடம் வேலை நேரத்தை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது..
தற்போது, வங்கி ஊழியர்கள் மாற்று சனிக்கிழமைகளில் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும்.
வேலை நேர மாற்றம் தொடர்பாக ஐபிஏ அரசாங்கத்திற்கு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும், விரைவில் ஊதியக்குழு திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.