வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் சமரசம் செய்ய முடியாத பிரிவினையின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் சிறப்புரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் ‘முழுமையான நீதியை’ வழங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு பயன்படுகிறது.
நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதி ஏஎஸ் ஓகா, நீதிபதி விக்ரம்நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் கருத்துப்படி, திருமண உறவு மீண்டும் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத வகையில் முறிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விவாகரத்துக்கு தடைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வதை தடுக்கும் விதமாக இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தவிர, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து வழங்குவதற்கு முன், ஆறு மாத கால காத்திருப்பும் “நீக்கப்பட்டடுள்ளது” என்று தீர்ப்பளித்துள்ளது.