காராஷ்டிராவின் லோனாரில் உள்ள மோத்தா அனுமன் கோவிலில் ஒரு காந்த பாறையால் கட்டப்பட்ட படுத்த நிலையில் ஒரு பெரிய அனுமன் மூர்த்தி உள்ளார்.

8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் அனுமன் ஆரம்பத்தில் இருந்து தூக்க நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.


கண்கள் திறந்த நிலையில் இருந்தாலும் இவர் தூக்கத்தில் இருப்பதாக கோவிலின் புராண வரலாற்றுப்படி சொல்லப்படுகிறது. 8 ஆம் நூற்றாண்டில் லோனார் பள்ளத்தை உருவாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து இந்த அனுமனின் சிலை செதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மூர்த்தி 9.3 அடி உயரமும் அனுமனின் இடது கால் சனி தேவரின் சிறிய சிலை உள்ளது. இந்த சிலை பல ஆண்டுகளாக சிவப்பு நிற செந்தூரம் பூசப்பட்டிருந்தது. இப்போது செந்தூரம் அகற்றப்பட்டு அனுமனின் அசல் வடிவத்தை காணலாம்.