கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ராம்நகர் எம்.பி. டி.கே. சுரேஷ் இன்று காலை தெரிவித்தார்.
இதனையடுத்து சென்னபட்டணத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெங்களூரு திரும்பிய அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் குழப்பம் நீடித்தது.
இந்த நிலையில் தனது சகோதரரும் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநில தலைவருமான டி.கே. சிவகுமார் போட்டியிடும் கனகபுரா தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதே தொகுதியில் டி.கே. சிவகுமாரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் அதிகாரபூர்வமாக போட்டியிடுவார்கள் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் கர்நாடக அரசியலில் இது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.கே. சுரேஷ் பத்மநாபநகரில் போட்டியிடுவார் என்று நேற்று டி.கே. சிவகுமார் அறிவித்த நிலையில் கனகபுரா தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தேர்தலில் திருப்பம் பத்மநாபநகர் தொகுதியில் டி கே சுரேஷ் எம்.பி. போட்டி ?