சென்னை:
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாகக் கூறி 2 வாரங்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று மாணவிகளை சந்தித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துகிறது.
Patrikai.com official YouTube Channel