சூரத்:
பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார்.
பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம்.
2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. ந்நிலையில் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். இதற்காக ராகுல் காந்தி இன்று சூரத் செல்ல இருக்கிறார்.