உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றான திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் ரூ. 3 முதல் 4 கோடி மதிப்புள்ள பணம், ஆபரணம் மற்றும் தங்கம் காணிக்கையாக வருகிறது.
சில பக்தர்கள் பங்குச் சான்றிதழை பாலாஜிக்கு பங்காக வழங்குகிறார்கள். அவற்றை டிமேட் வடிவில் மாற்றி திருப்பதி என்ற பெயரில் மாற்றுவது மிகவும் கடினமான பணியாக இருந்துவந்தது.
இதனை அடுத்து 2015 ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்திய பங்குத் துறை நிறுவனத்துடன் இணைந்து திருப்பதி பாலாஜி பெயரில் டிமேட் கணக்கை துவங்கியது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க ஆர்வமாக உள்ளனர்.
மோதிலால் ஓஸ்வால் புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது. சாமானியர்களும் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள், அவர்களுடன் சேர்ந்து இப்போது கடவுளின் பணமும் குபேரர்களின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் செகந்திராபாத்தை தளமாகக் கொண்ட நிஹார் இன்ஃபோ குளோபல் நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறது.
பங்குச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதை அடுத்து பக்தர்கள் இனி தங்கள் காணிக்கையை திருப்பதி தேவஸ்தான டிமேட் கணக்கில் பங்குகளாகவும் மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அல்லது உலகிலேயே டிமேட் கணக்கைத் திறக்கும் முதல் கோயில் திருப்பதி தேவஸ்தானம் தான் என்று கூறப்படுகிறது.
இதற்கு அடுத்து, மகாராஷ்டிராவில் உள்ள சித்திவிநாயகர் கோயிலும் டிமேட் கணக்கு தொடங்கியுள்ளது இந்த கணக்கு 2016 இல் தொடங்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகாகாள் சிவன் கோயிலுக்கும் டிமேட் கணக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.