காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 7 பேர் பலியான நிலையில், மேலும் பலர் காயமுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில், 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறத. இந்த நிலையில், இன்று காலை பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். . சிலரின் நிலை மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெடிவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.