சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வேளாண் அமைச்சர் ம்ஆர்கே பன்னீர்செல்வம் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (20ந்தேதி) தொடங்கியது. முதல்நாளானான நேற்று 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் காலை 10 மணியளவில் தாக்கல் செய்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக வேளாண் பட்ஜெட்டுடன் , மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற அமைச்சர், அங்கு கருணாநிதி சமாதியில் வேளாண் பட்ஜெட்டை வைத்து மரியாதை செய்தார்.