டெல்லி: காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணி அமைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று புதிய எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளது.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆனால், ஒற்றுமை இல்லாத நிலையே நீடித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பாரத் ராஷ்டிரிய சமீதி போன்ற கட்சிகள் காங்கிரஸ் தலைமையை ஏற்க மறுத்து வருகின்றன. இந்த நிலையில், புதிய எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்பட உள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ், சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். இது எதிர்க்கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறும்போது, காங்கிரஸ் தேசிய கட்சி. நாங்கள் மாநில கட்சிகள். மிக பழமையான கட்சியான காங்கிரஸ், தனது செயல்பாடு குறித்து முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்தில் நான் அமேதி சென்றி ருந்தேன். இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற எங்கள் கட்சி உதவியது. ஆனால் சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அநீதிஇழைக்கப்பட்டபோது, காங்கிரஸ்வாய் திறக்கவில்லை.
அமேதிமற்றும் ரேபரேலி தொகுதிகளில்,சமாஜ்வாதி கட்சி போட்டியிடவேண்டும் என எங்கள் தலைவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில், எங்கள்நோக்கம் பாஜக.,வை எதிர்ப்பதுதான்.பாஜக.,வுடன் கூட்டு சேரும் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றவர், பாஜக.,வை யார் எதிர்த்தாலும், அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அனுப்பப்படுகிறது. இதுபோல எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தியதால், காங்கிரஸ் வீழ்ந்தது. அதுபோல் வரும் காலத்தில் பாஜக.வும் அரசியல் ரீதியாக வீழ்ச்சியடையும் என்றார்.
அகிலேஷ் யாதவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், 2024-ல் பொதுத் தேர்தலைசந்திக்கவுள்ள நிலையில், கூட்டணி குறித்து முன்னதாகவே எந்த கருத்தையும் உறுதியாக கூறிவிட முடியாது. எனினும், பாஜகவை எதிர்கொள்ள எதிர்க் கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணி அமைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தேர்தலுக்கு முன்பாக, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது கூட்டணி என்ற பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இருக்கும். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.
2024 பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேவையான வியூகங்களை வகுக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளையும் முடிவு செய்வர் என்று கூறினார்.