காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது தெரிய வந்துள்ளது. போலீசார் ரோந்து வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டதும் கொள்ளையர்கள் தப்பிச் சென்றதால், பணம் கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை, அடுத்து, திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் 4 ஏடிஎம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவங்களில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருப்பதாக காவல்தறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவு மர்ம நபர்கள் கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்த வரியாக நபர்கள், போலீசாரின் ரோந்து வாகன சைரனுடன் வந்துள்ளது. அந்த சத்தத்தை கேட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சிலர் தப்பியோடுவதை கண்ட போலீசார், அங்கு வந்து பார்த்த போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் வங்கிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் வந்து பார்த்ததில் பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.