டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அங்கு இன்று மதிய நிலவரப்படி, திரிபுரா, நாகலாந்து மாநிலக்ஙளில், பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.
திரிபுரா மாநிலம்:
திரிபுரா மாநிலத்தில், பாஜக தனித்து போட்டியிட்டது. பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டி யிட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவியது.
இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பா.ஜனதா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 23இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. திரிபுரா மாநில தேர்தலில் பாஜக 34 இடங்களில் முன்னிலையுடன் பெரும்பான்மையில் உள்ளது.
நாகலாந்து மாநிலம்:
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும் பா.ஜனதா 19 தொகுதிகளிலும் களம் இறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்.பி.எப்.) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 12 இடங்களிலும் களம் இறங்கின. இங்கு பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.
நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் திமாபூர்-III தொகுதியில் ஹக்கானி ஜக்லு என்ற பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார். நாகாலாந்து மாநிலத்தில், பாஜக ஆட்சி அமைப்பதற்கு, தேவைக்கு அதிகமான பெரும்பான்மையுடன் உள்ளது.
60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி யுடன் கூட்டணியில் இருந்த பா.ஜனதா, இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியது. இதில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சோஹியாங் தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மதியம் 1மணி நலவரப்படி, தேசிய மக்கள் கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாரதிய ஜனதாகட்சி 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், முன்னிலையில் இருந்தன. மற்ற கட்சிகள் 26 இடங்களில் முன்னிலை வகித்தன.
மேகாலயாவில், ஆளும் என்.பி.பி. கட்சி 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.