நியூயார்க்: டிவிட்டர் நிறுவனத்தை பிரபல பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே சுமார் 5000 ஆயிரம் பணியாளர்களை நீக்கிய நிலையில், தற்போது மேலும் 10சதவிகித பணியாளர்களை நீக்கம் செய்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு, உலகளாவிய அளவில் பணியாளர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகும், எலோன் மஸ்க்கிற்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு யோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால், அதை உறுதிப்படுத்தும் வகையில், அவ்வப்போது அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இதனால், டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பணி எப்போது போகுமோ என்று தலைக்கு மேல் கத்தி தொங்கும் வகையில் பரிதவிப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
2022ம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி அன்று அதன் உள்கட்டமைப்பு பிரிவில் இருந்து பொறியாளர்களை பணிநீக்கம் செய்ததாக அறிவித்தது. . இருப்பினும், வேலையை இழந்த பல பொறியாளர்களுக்கு, டிவிட்டரில் உங்கள் பங்கு இனி தேவைப்படாது என்று மின்னஞ்சலைப் பெற்றனர். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே சுமார் 7,500 ஊழியர்களில் இருந்து சுமார் 2,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஊழியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை நிறுவனம் கடினமாக்கியது.
இந்த நிலையில், தற்போது மேலும் 10சதவிகிதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதன்படி, சுமார் 200 ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். பணிநீக்கம் தயாரிப்பு மேலாளர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் இயந்திர கற்றல் மற்றும் தள நம்பகத்தன்மையில் பணிபுரிந்த பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபரில் சமூக ஊடக தளத்தை வாங்கியதில் இருந்து செலவுகளைக் குறைக்க எலோன் மஸ்க் மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, கடந்த வாரத்திற்கு பிறகு, தற்போது டிவிட்டர் பணியாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த வார தொடக்கத்தில், The Information இன் மற்றொரு அறிக்கை, ட்விட்டர் விற்பனை மற்றும் தயாரிப்புகள் குழுவிலிருந்து 50 பேரை நீக்கியதாகக் கூறியது. சனிக்கிழமை இரவு தங்கள் கார்ப்பரேட் மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளியேறியதைக் கண்டுபிடித்தனர், இது பணிநீக்கங்கள் தொடங்கியதற்கான முதல் குறிப்பாகும்.
மீதமுள்ள தொழிலாளர்கள் தங்கள் பணி தொடர்பாக மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
[youtube-feed feed=1]