சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணனை நியமித்து ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற்ற (இப்போது) நீதிபதி விக்டோரியா கௌரி உள்பட 8 நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
அதைத்தொடர்ந்து, விக்டோரியா கவுரி, பாலாஜி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய வழக்கறிஞர்கள்; மற்றும் கலைமதி, திலகவதி ஆகிய மாவட்ட நீதிபதிகள் என்று ஐந்து நபர்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அவர்களின் பதவி பிரமாணம், பிப்ரவரி 7ந்தேதி பதவி ஏற்றனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணனை நியமித்து மத்திய அரசு பிப்ரவரி 23ந்தேதி பரிந்துரை செய்தது. இதை ஏற்று குடியரசு தலைவர் முர்மு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், நீதிபதியாக அறிவிக்கப்பட்ட வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால், அதில் தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 17 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று நீதிபதியாக பதவி ஏற்ற வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன், ஏற்கனவே சென்னை, மும்பை, டெல்லி, கர்நாடகா ஐகோர்ட்டுகளிலும் , உச்சநீதிமன்றத்திலும் வக்கீலாக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியம், ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்திய மருந்து நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வழக்கறிஞராக இருந்து சேவையாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.