டெல்லி: பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய புதிய கல்விகொள்கையை  பல மாநிலங்கள்  ஏற்காமல், பழைய நடைமுறையைத் தொடர்ந்வரும் நிலையில், மத்தியஅரசு நினைவூட்டும் வகையில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், குழந்தையின் வயதைக் கணக்கிடுவதற்கான கட்-ஆஃப் மாதத்தில் ஏற்படும் மாறுபாடுகளால் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக கல்வி நிறுவனர்கள் கூறுகின்றனர்

ஆனால், புதிய தேசிய கல்வி கொள்கைப்படி , 6வது வயதில்தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்க வேண்டும் என மத்தியஅரசு கூறியுள்ளது. புதிய கல்வி கொள்கையின்படி, 3 முதல் 8 வயது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி நிலைகள் 5 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கு முந்தைய கல்வி (பிரீ ஸ்கூல்) 3 ஆண்டுகள் அடங்கும். அதன் பின் 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு கல்வி நிலை இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறும்போது,  இந்த புதிய கல்வி கொள்கை ஆரம்ப கல்வி முதல் 2-ம் வகுப்பு வரை தடையற்ற கற்றலையும் குழந்தைகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இதற்கு அங்கன்வாடி அல்லது அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஆரம்ப கல்வி மையங்களில் 3 ஆண்டு தரமான கல்வி கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும்.

புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

[youtube-feed feed=1]