அதானி குழுமம் குறித்து விக்கிபீடியா-வில் உள்ள தரவுகளை 40 மேற்பட்ட எடிட்டர்-களுக்கு பணம் கொடுத்து பலமுறை மாற்றியுள்ளதாக விக்கிபீடியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சைன்-போஸ்ட் புலனாய்வு இதழ் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் அதானி குழுமம் மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் குறித்து ஒன்பது விக்கிப்பீடியா பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை 40 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் கொடுத்து அதன் தரவுகளை பலமுறை மாற்றியுள்ளது. அதில் 25 க்கும் ஐ.டி. போலியானது அல்லது அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவது என்று குற்றம் சாட்டியுள்ளது.
பணம் கொடுத்து போலி ஐ.டி.க்கள் மூலம் தரவுகள் மாற்றப்பட்டது குறித்து தெரியவந்ததை அடுத்து இந்தப் பக்கங்கள் விளம்பர நோக்கில் பதியப்பட்டவை என்று குறிப்பிட்டு விக்கிபீடியா நிர்வாகம் முடக்கியுள்ளதாக சைன்-போஸ்ட் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அதானி நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ள அதானி நிறுவனம் தொடர்ந்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறித்து வெளியாகியுள்ள இந்த தகவல் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அதானி நிறுவன பங்குகள் இன்றும் தொடர் சரிவை சந்தித்து வருவதுடன் அதற்கு கடனளித்த இந்திய வங்கித் துறை நிறுவனங்களின் நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது.