சென்னை:
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகர். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார்.

நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.