மும்பை:
நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.
நிதிச் சந்தை சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து வரும் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிக்கிறார்.
இதற்கிடையில் பணவீக்கம் குறைந்து வந்தாலும் ரெப்போ வட்டி விகிதமானது மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.