திருப்பூர்: தமிழரிடம் வடமாநிலத்தவர் பணம் பறிப்பது போன்ற வீடியோ பொய்யானது என திருப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருப்பூரில்  தமிழர் ஒருவரிடம் வட மாநிலத்தவர்கள் ரகளை செய்ததுடன்  அவரிடம் இருந்து  ரூ.500 பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.மேலும், தமிழரின், இருசக்கர வாகனத்தை கொடுக்க மறுத்து வட மாநிலத்தவர்கள் வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, வடமாநிலத்தவருக்கு எதிராக பல இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டன. மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் போஸ்டரும் ஒட்டியிருந்தனர்.

இந்த நிலையில்,  தமிழரிடம் வடமாநிலத்தவர் பணம் பறிப்பது போன்ற வீடியோ பொய்யானது, வதந்திகளை நம்ப வேண்டாம் என திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள நபரின் வாக்குமூலத்தையும் இணைத்து திருப்பூர் காவல்துறையினர் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைனர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://twitter.com/tiruppursmc