சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் 2வது திட்டப்பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி வழங்கி உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூ.63,246 கோடியில் மாதவரம் – சிறுசேரி (45.8 கி.மீ.), கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி (26.1 கி.மீ.), மாதவரம் – சோழிங்கநல்லூர் (47 கி.மீ.) என 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த வழித்தடங்களில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில், திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரை 17 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வரை நீடிக்கப்படுகிறது.
இநத் நிலையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி வழங்குவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. வழித்தடம் 4 மற்றும் 5-ல் சுரங்கம், உயர்மட்ட பால பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.