சென்னை:  தமிழ்நாட்டில் 11, 12ம் வகுப்புகளுக்கபான செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு மாணாக்கர்கள் உரிய நேரத்தில் வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த  அரசு அலுவலர்களுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வு தேதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, செய்முறை தேர்வுகள் மார்ச் 6-ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வுக்கும்  செய்முறை தேர்வுக்கும் இடையே சில நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதால்,  மாணாக்கர்களின் நலன் கருதி, செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுத்தேர்வுக்கும் செய்முறை தேர்வுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே செய்முறை தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ள அமைச்சர்,  கிராமபுற மாணவர்கள் உரிய நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு செல்லும் வழி தடங்களை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருப்பதடன்,  மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.