குடியரசு கொண்டாட்டம்….
பா. தேவிமயில் குமார்
கொடியையும் குடிகளையும்,
காத்திடும் சட்டங்கள்!!!
கவசமாய் நமக்கு!
காலமெல்லாம் சட்டங்கள்!
எளியவனின் குரலும்
ஓங்கும் உயரமான
இடங்களில் கூட,
ஒவ்வொரு நாளும்!
ஒரு நீதியால்!!
தாயவள் அன்போடு
தகை சால்
இராணுவ வீரர்களின்
காக்கும் பணியை
கருத வேண்டும்!!!
சட்டப் போராட்டம்
செய்யுமிடங்களுள்
சப்தங்களை உற்று
கேட்கும் உரிமை வரிகள்!! !
கடமைகளை செய்யும்
கண்ணிய மனிதர்களை,
போற்றுவோம் ,
வரலாற்று பேரேடுகளில் !!!
அரசியல் சாசனத்தை
இனி அறிவிப்போம்,
இந்தியாவின் புனித
நூல்… இனி இதுவென!!!!
எம் நாட்டின்,
இறை வடிவ பாரத மாதாவை
வணங்கி மகிழ்வோம்
அனுதினமும்!!
ஒவ்வொரு குடி மகனும் !!
நேர்மறை எண்ணத்தால்,
நிரப்பிடுவோம்,
நம் நாட்டின் எல்லைகளை,
நாற்புறமும்!!
நல்ல நினைவுகளால்!!
நம் கையில் இருக்கும்
செங்கோலை,
நாளும் பிடித்து நிற்போம்….
நம் நம்பிக்கை இதுவென!!
சட்ட புத்தக முன்னுரையுடன் !!!
விவசாயம்,வணிகம்
விளையாட்டு என
வென்று நிற்போம்
உலக வரிசையில்!!!
உவகை மாறாமல் !!
மனிதம், புனிதம்
மகத்துவம், மாண்பு
என யோசிக்கும்
அடுத்த… அழகிய தலைமுறையை
தாங்கிடுவோம்!!
விடுமுறை தானே என,
சமூக வலையில் இன்று விழாமல்
இனி நம் நாட்டுக்கு
என்ன செய்யலாம் …
என யோசிப்போம்
இந்த நாளில் இருந்து…….இல்லை இல்லை…..
இந்த நிமிடத்தில் இருந்தே!!!
ஜெய் ஹிந்த்!!
ஜெய் ஹிந்த்!!!
ஜெய் ஹிந்த்!!