சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மக்கள் நீதி மையத்திடம் ஆதரவு கோரப்படும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில், “மகனுக்கு தான் வாய்ப்பு கேட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாங்கள் தான் அவரை முன்னிறுத்தினோம் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்தம் போட்டியிட கட்சி தலைமையிடம் கேட்டுள்ளதாக இளங்கோவன் கூறியிருந்த நிலையில், அவரது பெயரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவோம் என்றவர், மக்கள் நிதி மய்யம் கட்சியின் ஆதரவும் கோரப்படும் என்றார். மநீம தலைவர் கமல்ஹாசனிடம் போனில் தொடர்பு கொண்டு ஆதரவு கோருவோம் என கூறினார்.
இதற்கிடையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி, திருநாவுகரசர், இவிகேஎஸ் தனது மகனுக்குத்தான் வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், நாங்கள்தான் நாங்கள் தான் அவரை முன்னிறுத்தினோம், திமுக தரப்பிலும் அவரைத்தான் முன்னிறுத்த விரும்பினர். அனதலல், அவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இயலும் என தெரிவித்தார்.