மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த கார்கள், நகைகள் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெற்றதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

வழக்கு காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகள் தடைபடுவதால் தன்னை வெளிநாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலின், தனக்கு சுகேஷ் சந்திரசேகரை தனது உதவியாளர் பிங்கி இரானி தான் அறிமுகப்படுத்தியதாக கூறினார்.

அவரது உண்மையான பெயர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தனக்கு முதலில் தெரியாது என்றும் பின்னர் அவர் வழக்கில் கைதான போது தான் அவர் குறித்த முழுவிவரம் தெரியவந்ததாகவும் கூறினார்.

தனது உதவியாளர் பிங்கி இராணிக்கு வேண்டுமானால் சுகேஷ் குறித்த விவரங்கள் முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறிய அவர் “எனது உணர்ச்சிகளை மைய்யமாக வைத்து என் வாழ்க்கையை நரகமாக்கி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த மனு குறித்து சிபிஐ தரப்பின் பதிலை அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் ஜனவரி 27 ம் தேதி தனக்கு படப்பிடிப்பு இருப்பதால் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்கை கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து இந்த மனு தொடர்பான விசாரணையை ஜனவரி 25 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.