சென்னை: மின்னணு (பேட்டரி) வாகனங்களுக்கு 50% வரிவிலக்கு அளித்து ஏற்கனவே தமிழகஅரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 100 சதவிகித வரி விலக்கு அளித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு 2025ம் ஆண்டுவரை வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காற்று மாசு ஏற்படுவதை தடுக்க மத்தியஅரசு, பேட்டரி வாகனங்களை உபயோகப்படுத்தி அறிவுறுத்தி வருகிறது. அதற்கான சலுகையாக, வரி விலக்கு அளித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது. அதன்படி வரி விலக்கு அளிக்கப்பட்டது.
அதன்படி, நவம்பர் 3, 2020 முதல் டிசம்பர் 31, 2022 வரையிலான அனைத்து BOV களுக்கும், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத (EV கள்) மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று 2020ம் ஆண்டு நவம்பர் 2 தேதியிட்ட அரசு உத்தரவு தெரிவிக்கிறது. மேலும், மார்ச் 2020 இல், அரசு வளாகத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி எதிர்கால EV சார்ஜிங் நிலையத்தையும் திட்டமிடுவதாக மாநில அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது மாநிலத்தில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய ஊக்கமாக, பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு (BOVs) மோட்டார் வாகன வரியில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கும் உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, 01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
வாகன உற்பத்திக்கான மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, தமிழ்நாடு அரசு மின்சார இயக்கத்திற்கான கவர்ச்சிகரமான மையமாக உருவெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு, இது EV களுக்காக ஒரு தனி கொள்கையை அறிமுகப்படுத்தியது, இதையடுத்து( தமிழ்நாட்டில் EV உற்பத்தி மற்றும் தொடர்புடைய பகுதிகளில் புதிய முதலீடுகளுக்கு வழி வகுத்தது.
இந்த நிலையில் மின்னனு வாங்களுக்கு முழு வரிச்சலுகை வழங்கியதுடன், அதற்கான சார்ஜிங் நிலையங்களை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.